Viral Video : மின்வேலியில் சிக்கிய உயிரிழந்த 3 யானைகள்.... - சோகத்தில் சுற்றித் திரியும் குட்டிகள்...!
மின்வேலியில் சிக்கிய 3 யானைகள் உயிரிழந்த நிலையில், குட்டி யானைகள் சுற்றி சுற்றி திரிந்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த 3 யானைகள்
சமீபத்தில் தர்மபுரி, பாலக்கோடு அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பரிதமாக உயிரிழந்தன.
தாயை இழந்த 2 குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன.
இறந்த 3 யானைகளை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சோகத்தில் சுற்றித் திரியும் குட்டிகள்
தாய் இல்லாமல் பரிதவித்து நிற்கும் குட்டி யானைகளை பிடிக்க வனத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களின் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.
Three elephants were electrocuted while they were crossing an illegal fence in Dharmapuri district of Tamil Nadu on Tuesday.
— Suresh Kumar (@journsuresh) March 7, 2023
One arrested.#elephants#dharmapuri@CMOTamilnadu@mkstalin @supriyasahuias
pic.twitter.com/42nZQkf3Ax
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி. உயிரிழந்த தாய் யானையை சுற்றி வரும் 9 மாத குட்டி யானை. #dharmapuri #elephants #elephantdeath #forest pic.twitter.com/D1rM11oVY0
— Ƭɴ Thiru ࿐திருலோகசந்தர் (@R_ThiruChandar) March 7, 2023