அதிகாரத்தை கையில் எடுத்த 5 வயது பலூன் விற்கும் சிறுவன்.... அதிரடியாக களத்தில் குதித்து என்ன செய்கிறார் தெரியுமா?
போலீஸ் போல கையில் தடியை வைத்துக் கொண்டு மாஸ்க் அணியாத சுற்றுலா பயணிகளை 5 வயது சிறுவன் ஒருவன் கண்டிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவின் பாக்சுனாக் எனும் சுற்றுலா தலத்தின் கடைவீதி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் 5 வயதாகும் சிறுவன் ஒருவன் கையில் தடி ஒன்றை வைத்துக் கொண்டு, முகக்கவசம் அணியாமல் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை முகக்கவசம் அணியுமாறு கடிந்து கொள்கிறான்.
உங்களுடைய மாஸ்க் எங்கே எனக்கேட்கும் அந்த 5 வயது சிறுவன், அதிருப்தியில் தடியால் அவர்களை லேசாக சீண்டுகிறான்.
காலில் செருப்பு கூட அணியாமல் அந்த வழியாக செல்வோரை முகக் கவசம் அணிய வேண்டும் என சிறுவன் வலியுறுத்தும் நிலையில் அந்த வழியில் சென்ற பலரும் முகக்கவசம் அணியாமல் சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சிலர் முகக்கவசம் அணியாமல் கூலிங் கிளாஸ் கூட அணிந்து செல்வதை பார்க்கலாம். இன்ஸ்டா பக்கமான Dharamshalalocal-ல் இந்த சிறுவனின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக மாறியிருக்கிறது.