மாமனாருக்கு வாழ்த்து கூறிய தனுஷ்! மீண்டும் குடும்பம் ஒன்று சேருமா?
நடிகர் தனுசும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்று வெளியாக ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர்.
இதனால் கோபமடைந்த நடிகர் ரஜினிகாந்த், யாரிடமும் பேசாமல் அமைதி காத்ததாக தகவல்கள் கசிந்தன.
இதனால் கடும் மனவேதனையில் இருந்த ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவை திட்டியதாகவும் தகவல்கள் பரவின.
மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம்?
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தாராம்
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்துவிட்டாராம்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

வாழ்த்து கூறிய தனுஷ்
இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த்தின் 'தலைவர் 169' படத்தின் 'ஜெயிலர்' தலைப்பு வெளியானது.
இந்த அறிவிப்புக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தனுஷ்.
இந்த டுவிட்டரைப் பார்த்த அவரது ரசிகர்கள் தலைவர் மேலே தனுஷுக்கு இன்னும் அன்பும், மரியாதையும் குறையவே இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

♥️♥️???? pic.twitter.com/SgpOWz9i12
— Dhanush (@dhanushkraja) June 17, 2022