கிராம மக்களுக்கு Hi சொல்லிக்கொண்டே ஜாக்கிங் சென்ற தனுஷ் - வைரலாகும் வீடியோ!
கிராம மக்களுக்கு Hi சொல்லிக்கொண்டே ஜாக்கிங் சென்ற தனுஷின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Hi சொல்லிக்கொண்டே ஜாக்கிங் சென்ற தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.
தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் கிராமப்பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனுஷ் படப்பிடிப்பு தளத்திலிருந்து காலையில் கிராம சாலைப் பகுதியில் ஜாக்கிங் செய்தார்.
தனுஷ் ஜாக்கிங் செய்து வருவதைப் பார்த்த கிராம மக்கள் வியப்போடு பார்த்தனர். அப்போது, கிராம மக்களைப் பார்த்த தனுஷ் Hi.. Hi... என்று கையை அசைத்துக் கொண்டே ஜாக்கிங் செய்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Recent video at @dhanushkraja walking moment early morning ?❤️?#CaptainMiller @B_RajaAIDFC @Chowdrey_ @Dhanush_Trends @DirectorS_Shiva @Chennai_Fans_ pic.twitter.com/dKy1a9pceI
— Sullan Mani❤️ (@Manikan74477455) June 3, 2023