பெத்த மகனை விட்டு விட்டு திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் தனுஷ்! பரபரப்பு வீடியோ
மகன்களை தியேட்டரிலேயே விட்டுவிட்டு நடிகையுடன் தனுஷ் ஓட்டம் பிடித்து இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷின் தன்னுடைய மகன், அனிரூத், நடிகை ராஷி கண்ணா மற்றும் படக்குழுவினருடன் ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியாக காலை 8 மணிக்கு திரையிடப்பட்ட 'திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்து ரசித்தார்.
தனுஷ் மற்றும் படக்குழுவினர் வந்த தகவலை அறிந்து, ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்கு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திரைப்படம் முடிந்து காரில் ஏறி செல்ல கூட வழி இல்லாததால், தனுஷ் தன்னுடைய பாதுகாவலர்களுடன் நடிகை ராஷி கண்ணா கைகளை பிடித்து கொண்டு, மிகவும் வேகமாக ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து தப்பித்து காரில் செல்ல ஓடிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகையின் கையை பிடித்து கொண்டு செல்லும் தனுஷ், தன்னுடன் படம் பார்த்த மகனை மறந்து விட்டாரா? என நெட்டிசன்கள் சில கேள்வி எழுப்பியும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கில் திரண்ட ரசிகர்கள்.. தெறித்து ஓடிய நடிகர் தனுஷ்..! #Chennai #RohiniTheatre #ActorDhanush pic.twitter.com/s0FH3l3W3x
— Polimer News (@polimernews) August 18, 2022