விவாகரத்து குறித்து அன்றே பேசியுள்ள தனுஷ்: காணொளியை வெளியிட்டு அம்பலப்படுத்திய நெட்டிசன்கள்
தனுஷ், ஐஸ்வர்யாவின் பிரிவு சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் தனுஷின் பழைய காணொளி ஒன்றை நெட்டிசன்கள் வெளியிட்டு கோர்த்து விட்டுள்ளனர்.
காதல் மனைவியுடன் 18 வருட வாழ்க்கையை பிரிந்து தனித்தனியாக வாழ்வதாக கூறி தனுஷ், ஐஸ்வர்யா அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பினை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். காரணம் தலைவர் அன்றே உங்களை வேண்டாம் என்று கூறியும், கேட்காமல் திருமணம் செய்து தற்போது பிரிந்து விட்டீர்களே! தலைவரை கஷ்டப்படுத்திவிட்டீர்களே என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் ஜாலியாக சொன்ன விஷயம் இன்று அவருக்கு எதிராக திரும்பிவிட்டது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது வழக்கமாக கூறும் வார்த்தையினை தனுஷிடமும் கேட்கப்பட்டது.
இதற்கு தனுஷ் சிரித்துக் கொண்டே... என்ன அநியாயம் பார்த்தீங்களா சார். நம்ம போய் வேலை செஞ்சு, காலக் கட்டி, வயித்த கட்டி, டான்ஸ் ஆடி சம்பாதிக்கிறோம். பின்னாடி பொண் இருக்காங்கனு சிம்பிளா சொல்றாங்க. பின்னாடி இருந்து யாருக்கு பிரயோஜனம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் அன்று ஏதோ ஜாலியாக சொன்னதை இன்று விவாகரத்து அறிவிப்போடு சேர்த்து வைத்து நெட்டிசன்கள் கோர்த்துவிட்டு பேசத் தொடங்கியுள்ளனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022