செவ்வாய் -ராகு சேர்க்கையால் உருவான அங்காரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவற்றின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலுக்கு காரணியாக விளங்குகிறார். இவர் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியையும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால், செவ்வாய்–ராகு இணைப்பு உருவாகியுள்ளது.
ஜோதிடத்தில் இந்த சேர்க்கை அசுபமாகக் கருதப்படுகிறது. இதனால் அங்காரக யோகம் உருவாகி, மன அழுத்தம், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் வேலையில் தடைகள் ஏற்படுத்தும்.
செவ்வாய் செப்டம்பர் 2-ம் தேதி வரை திருவாதிரை நட்சத்திரத்தில் இருப்பதால், அங்காரக யோகத்தின் தாக்கமும் அதுவரை நீடிக்கும். இதனால் 3 ராசிக்காரர்கள் செப்டம்பர் 2-ம் தேதி வரை எந்த ராசியினர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

செவ்வாய்–ராகுவால் உருவாகும் அங்காரக யோகத்தின் தாக்கத்தால், மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வேலை தொடர்பான மனஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் தொழிலில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுங்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலைப்பளுவை சந்திக்கக்கூடும்.எனவே, மன அழுத்தத்தை குறைத்து, திட்டமிட்டு வேலை செய்வது சிறந்தது.
கன்னி

செவ்வாய்–ராகுவால் உருவாகும் அங்காரக யோகத்தின் தாக்கத்தால், கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வேலைகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
புதிய நபர்களுடன் ஏற்படும் நட்பு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பழகும் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. இந்தக் காலகட்டத்தில் உடல்நலத்திலும் அன்றாட செயல்பாடுகளிலும் அதிக கவனம் தேவை.
குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அல்லது தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிரச்சனைகளை பெரிதாக்காமல், ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி தீர்வு காண முயற்சிப்பது நல்லது.
மகரம்

செவ்வாய்–ராகுவால் உருவாகும் அங்காரக யோகத்தின் தாக்கத்தால், மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழலை சந்திக்க நேரிடலாம்.
பணியிடத்தில் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் விலகி இருப்பது நல்லது. அதேபோல், முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன் நன்கு ஆலோசித்து செயல்பட வேண்டும்.
புதிய வேலைகளை மேற்கொள்ளும்போது சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகக்கூடும். எனவே, அவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, நிதானமாகச் செயல்படுவதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |