அச்சு அசல் இளம் வயது ரஜினியாகவே மாறிய தனுஷின் மூத்த மகன்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்த் சிறுவயதில் இருந்தது போலவே அவரது பேரன் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்திற்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆனால் இந்த தம்பதிகள் தற்போது மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில் யாத்ரா அவரது தாத்தா ரஜினிகாந்த் இருந்தது போன்று அச்சுஅசலாக இருக்கின்றார்.
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இரண்டு மகன்களும் கலந்து கொண்ட நிலையில், அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஆம் தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் பேரன் யாத்ராவின் புகைப்படத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
யாத்ரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நாய்கள் வளர்ப்பது மிகவும் பிடித்த நிலையில் நான்கு நாய்களை வளர்த்து வருகின்றார். மாலை வேலையில் நாய்களை போயஸ் கார்டன் பக்கம் வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கமாம்.
யாத்ரா சமூகவலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை என்றாலும், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் யாத்ராவின் புகைப்படம பதிவிடப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |