மகன்களுக்காக பாடிய தனுஷ்! இசை கச்சேரி மேடையில் நடந்த ருசிகரம்
இளையராஜாவின் ராக் வித் ராஜா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் தனது மகன்களுக்காக மேமையில் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மகன்களுடன் தனுஷ்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்.
இவரின் அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
விரைவில் இருவரும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Rock With Raja
இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் கலந்து கொண்டார் தனுஷ்.
அப்போது மேடை ஏறிய தனுஷ், “நிலா அது வானத்து மேலே” பாடலை தனது மகன்களுக்காக மாற்றி ”கண் மூடி தூங்கிடு பூவிழி மானே” என்ற தாலாட்டு பாடலாக பாடினார்.
இதனை அவரது மகன்கள் நெகிழ்ச்சியுடன் கேட்டு ரசித்தனர், தனுஷ் பாடி முடித்தவுடன் இளையராஜாக கைதட்டி பாராட்டினார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.
Mesmerizing voice ?
— Anbuselvan™? (@Raj_twetz) March 19, 2022
Especially ilayaraja song !@dhanushkraja ?❤#RockWithRaja #Dhanush pic.twitter.com/Nqxy97X4e5