தோழி என்று கூறிய தனுஷிற்கு ஐஸ்வர்யா கொடுத்த பதிலடி! தீயாய் பரவும் பதிவு
தோழி என்று கூறி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த தனுஷிற்கு பதில் கொடுத்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது பிரிந்து சென்றுள்ளனர்.
இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எல்லாம் தோல்வியிலேயே முடிந்து வருகின்றது.
இருவரும் அவரவர் வேலையில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றனர். அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மட்டும் பேசிக்கொள்கின்றனர்.

திருமணத்தில் தோழிகள் கொடுத்த சர்ப்ரைஸ்! தேம்பி தேம்பி அழுத மணமகள்
ஐஸ்வர்யா மியூசிக்
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கியதோடு, தனுஷும் படப்பிடிப்பில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடலான 'முசாபிர்' நேற்று மாலை வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இந்தப்பாடலை நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.
அதில் என் பிரெண்ட் ஐஸ்வர்யாவின் மியூசிக் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless
— Dhanush (@dhanushkraja) March 17, 2022
வாழ்த்திய தனுஷிற்கு பதில்
தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என்று கூறி பதில் கொடுத்ததற்கு நன்றி தனுஷ் என ஐஸ்வர்யா பதிலளித்துள்ளார். அவரின் இந்த 'நச்' பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் போல் எந்த விதமான சர்ச்சை வார்த்தைகளும் இல்லாமல் பெயரை குறிப்பிட்டு ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Thank you Dhanush….Godspeed https://t.co/XyP9lmnX3P
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 17, 2022