இனி ஐஸ்வர்யாவுடன் சேரவே முடியாது!.. இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ் நெருக்கம்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது நல்ல விமர்சனத்தை பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான தனுஷின் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு, தனுஷ் தியேட்டரில் இருந்து, நடிகை ராஷி கண்ணாவை கையை பிடித்தபடி ஓடினார்.
அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதன்பின்னர், தனுஷ் மூத்த மகனான யாத்ராவின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடிகையுடன் நெருக்கம்
அதற்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா என குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகின.
அந்த வகையில், தற்போது தனுஷ் பிரபல நடிகரின் மகளுடன் இரவு பார்ட்டியில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சரத்குமாரின் வரலட்சுமி மகள் தான். இருவரும் கருப்பு நிற உடை அணிந்து மிகவும் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கான பார்ட்டியில் எடுக்கப்பட்டது எனக்கூறப்படுகிறது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதைக்கண்ட நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர தனுஷ் வாய்ப்பே இல்லை போல என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.