பிரிவிற்கு பின்பு மவுனம் களைத்த தனுஷின் முதல் பதிவு! மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒற்றை புகைப்படம்
நடிகர் தனுஷ் தனது மனைவியை பிரிந்த பின்பு பல நாட்கள் கழித்து இன்ஸ்டாவில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் வாழ்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகள் தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூகவலைத்தளங்கள் மூலம் அறிவித்தனர்.
இவர்களின் பிரிவிற்கு காரணம் தெரியாமல் தவித்து வரும் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆம் பிரிவதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு பின்பு எந்தவொரு பதிவும் போடாமல் தனுஷ் மவுனம் காத்து வந்தார்.
இந்நிலையில் நானே வருவேன் படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு சென்ற தனுஷ் தன் மூத்தமகன் யாத்ராவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின்பு தனுஷின் இந்த பதிவினை அவதானித்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த புகைப்படத்தினை அவதானித்த சிலர் அச்சு அசல் தனுஷை போன்று இருப்பதாக கூறி வாழ்த்தி வருவதோடு, இளையமகன் தாயுடனும், யாத்ரா தந்தையுடனும் இருக்கின்றார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24