மருமகனுக்கு டான்ஸ் மாஸ்டரான தனுஷ்- இணையவாசிகள் கவனத்தை தொட்ட Video
மருமகனுக்கு டான்ஸ் மாஸ்டரான தனுஷின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ்.
இவர், சினிமாவுக்கு வந்த காலம் முதல் பல வதந்திகள், சர்ச்சைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை கடந்து வந்து தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.
தன்னை போன்று சினிமாவில் சாதிக்க நினைக்கும் திறமைசாலிகளை இனங்கண்டால் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு தந்து உதவுவது அவரின் நோக்கமாக இருந்து வருகிறது.
அந்த வரிசையில் சினிமாவுக்குள் வந்து சாதித்தவர்கள் தான் சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன். இவர்களுக்கு அடுத்து வருபவர் தான் நடிகர் பவிஷ். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகிய ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
டான்ஸ் மாஸ்டராக மாறிய தனுஷ்
இந்த நிலையில், இந்த வருடம் நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன், அறிமுகம் நடிகர் பவிஷ் மற்றும் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் NEEK திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் NEEK திரைப்படம் பற்றிய விமர்சனங்களும் பேட்டிகளும் வைரலாகவுள்ளது.
அந்த வகையில், தன்னுடைய மருமகன் பவிஷிற்கு தனுஷ் நடனம் சொல்லிக் கொடுக்கும் காணொளியொன்று வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் எப்படி முகபாவணை இருக்க வேண்டும், எப்படி ஆட வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என குழந்தைக்கு போல் சொல்லிக் கொடுக்கிறார்.
இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த இந்த காணொளியை பவிஷ் மற்றும் தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |