இரு மகன்களுடன் அமெரிக்காவில் இருந்து தனுஷ் வெளியிட்ட புகைப்படம் - என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா?
நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதற்கு தனுஷ் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ.
இவர்களது இயக்கத்தில் நடிகர் தனுஷ் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், இம்மாதம் 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு மகன்களுடன் சென்ற தனுஷ், இன்ஸ்டா வெளியிட்ட பதிவில், ''யாத்ராவும், லிங்காவும் முழுமையாக ஷோவை கைப்பற்றிவிட்டார்கள்'' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.