மகளுக்காக கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ரஜினி! ஓகே சொன்ன ஐஸ்வர்யா...பிரிந்த தனுஷ்!
தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கடைசி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிவதாக முடிவு செய்திருப்பதை குடும்பத்தினரும் ஏற்கவில்லை.
இரண்டு குடும்பத்தினருமே அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஸ்வர்யா கணவரை பிரிந்து வாழ்வதில் ரஜினிக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. கணவருடன்தான் சேர்ந்து வாழ வேண்டும் என ஐஸ்வர்யாவுக்கு ரஜினிகாந்த் ஆர்டர் போட்டார்.
இதையடுத்து ஐஸ்வர்யாவும் தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால் தனுஷ், தன்னால் உடனடியாக மனதை மாற்றிக்கொள்ள முடியாது, தனக்கு அவகாசம் வேண்டும் என கூறி விட்டதாக தகவல் வெளியானது.
தனுஷின் குடும்பத்தினரும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டனர். ஆனால் தனுஷ் இறங்கி வருவதாக தெரியவில்லை.
நண்பர்கள் மூலம் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியை தழுவியுள்ளது. சில அழுத்தங்களை கொடுத்த போதும் தனுஷ் தனது முடிவில் இருந்து மாறமல் உள்ளார்.
இதனால், இந்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை என்பதை அறிந்த ரஜினி தனது கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தனது பேர பிள்ளைகள் மூலம் மகளையும் மருமகனையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்ததற்கு பிறகு, இருவருமே அவரவர் வேலை தொடர்பாக ஹைத்ராபாத்திலேயே உள்ளனர். இதனால் அவர்களின் பிள்ளைகள் தற்போது ரஜினியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார்கள்.
இந்நிலையில் பிள்ளைகள் மூலமாக பெற்றோர் இருவரையும் சந்திக்க வைக்க நடிகர் ரஜினிகாந்த் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளைகள் பேசும் போது பெற்றவர்களின் மனம் மாறும் என்ற எண்ணத்தில் ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிள்ளைகள் இருவருமே வளர்ந்தவர்கள். விபரம் அறிந்தவர்களாக உள்ளனர்.
ஆகையால் அவர்கள் தங்களின் பெற்றோரிடம் பேசினால் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்களாம் குடும்பத்தினர். பார்க்கலாம்... இப்போதாவது பிரச்சினை தீருமா என்று.