தீபாவளிக்கு நடந்த மீட்டிங்.. தனுஷ் - ஐஸ்வர்யா இணைவது உறுதி- குஷியில் ரசிகர்கள்
தீபாவளி பண்டிகையன்று ரஜினிகாந்த் வீட்டில் ஐஸ்வர்யா- தனுஷ் விவாகரத்து குறித்து பேசப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருந்து வரும் நிலையில், விவாகரத்து பெறப்போவதாக தகவல் வெளியிட்டிருந்தனர். ஆனால் இதற்கான முறையான காரணத்தை வெளியிடவில்லை.
இதனை தொடர்ந்து தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவை குடும்பத்தார் சரிச் செய்வதற்கு பல முறை முயற்சிகள் செய்தும் பயனளிக்கவில்லை. இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு மொத்தம் மூன்று முறை விசாரணைக்கு வந்தும் இருவரும் ஆஜராகவில்லை. இதனால் தனுஷ் - ஐஸ்வர்யா இணைவது உறுதி என்று ஆணித்தரமாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.
தீபாவளி அன்று நடந்த சந்திப்பு
இதற்கிடையில், தீபாவளி பண்டிகை அன்று ரஜினிகாந்த் வீட்டில் தனுஷும், ஐஸ்வர்யாவும் சந்தித்துக்கொண்டதாகவும், அப்போது தனுஷிடம் ரஜினிகாந்த் மனம் விட்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், தனுஷும் தனது தரப்பு விஷயங்களை சொல்லிவிட்டு தாங்கள் இருவரும் மீண்டும் இணைவது உறுதி என்று ரஜினியிடம் வாக்கு கொடுத்திருப்பதாகவும், அனைவரும் ஒன்றாக இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாடியதாகவும் போயஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இருவரும் சேர்வதால் ரசிகர்களும் மகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |