தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்ய தெரியுமா? இது சப்பாத்திக்கு சூப்பராக இருக்குமாம்!
பொதுவாக இரவு வேளைகளில் பூரி, சப்பாத்தி செய்வார்கள். இது இரவு வேளையை விட காலை வேளையில் சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது.
பூரி, சப்பாத்திக்கு தினமும் செய்கின்ற சாம்பார் செய்யாமல் பன்னீரை வைத்து இலகுவான ரெசிபி செய்யலாம்.
அந்த வகையில், தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா எப்படி செய்யலாம் என தொடர்ந்து பார்க்கலாம்.
ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 6 (அரைத்தது)
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* பால் - 1/4 கப்
* க்ரீம் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பன்னீர் துண்டகளை போட்டு ஊற வைக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் கடலை மாவு ஆகிய பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
இதனை தொடர்ந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஊற வைத்திருந்த பன்னீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
பின்னர் வேறோரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு சீரகம்,வெங்காயம், இஞ்சி பூண்டு, ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதங்கிய பிறகு அதில், மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் கசூரி மெத்தி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வாசம் வரும் போது, கடலை மா மற்றும் அரைத்த வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து சர்க்கரை விட்டு கிளறவும். மசாலா கெட்டியானதும், பால் மற்றும் க்ரீம் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
இறுதியாக சூடு நீர் ஊற்றி உப்பு, கொத்தமல்லி தூவி மிதமான சூட்டில் வைத்து இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |