பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்!
பொதுவாகவே தினசரி உணவில் பழங்களை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
குறிப்பாக பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் செறிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட உடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளை குறித்த சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது பாதக விளைவை ஏற்படுத்துகின்றது.
அப்படி பப்பாளி பழத்தை சாப்பிடும் போது தவறியும் சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்
பொதுவாக ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பப்பாளியை கலந்து பல இடங்களில் சாலம் செய்யபடுகின்றது.ஆனால் பப்பாளி பழத்துடன் ஒருபோதும் இவ்வாறான சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிட கூடாது.
காரணம் இந்த இரண்டு பழங்களிலுமே வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதுமட்டுமன்றி அதிக புரதம் நிறைந்த உணவுகளுடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், அவை சில உயர் புரத உணவுகளின் செரிமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இறைச்சி, மீன் அல்லது டோஃபுவுடன் பப்பாளியை சேர்ந்து சாப்பிடுவதால் நெரிமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் உயர் புரத உணவுகளுடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவ நிர்ணர்களின் கருத்தின் அடிப்படையில் பப்பாளி பழத்துடன் புளித்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவதை திவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் பப்பாளியின் என்சைம்கள் அவற்றுடன் கலந்தால், அவை செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் இரைப்பை குடல் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
பால் பொருட்களுடன் தவறியும் பப்பானி பழத்தை சேர்த்து சாப்பிட கூடாது. பப்பாளியை மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.
பப்பாளி பழத்தில் பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் செரிவாக காணப்படுகின்றது. இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைப்பதுடன் வீக்கம், வாயு மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |