நாவூறும் சுவையில் பேரீச்சம்பழ பாயாசம்!தீபாவளி ஷ்பெஷலா இதை செய்தால் போதும்
எல்லோரது வீட்டிலும் எதாவது ஒரு விசேஷம் வந்தால் பாயாசம் செய்வது வழக்கம். எப்போதம் ஒரே பாயாசத்தை சாப்பிட்டால் சிலருக்கு பாயசம் மேல் இருக்கும் ஆசை கூட இருக்காது.
தற்போது திபாவளி வருகிறது. இந்த நாளில் சுவையான இனிப்பு பண்டங்கள் எல்லோரும் செய்வார்கள். இந்த நெரத்தில் பாயாசம் செய்ய விரும்பும் சபர்களுக்காக பேரீச்சம்பழ பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இந்த பாயாசம் லட்சுமி தேவிக்கு அர்ப்பணித்தால், எல்லாம் உங்களுக்கு நன்றாக அமையும்.
தேவையான பொருட்கள்
- பேரீச்சம்பழம் - 15
- பாதாம் பால்- 1 கப்
- சர்க்கரை - ½ டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
- பிஸ்தா தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
பேரீச்சம்பழத்திலிருந்து விதைகளை எடுத்து மெதுவாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து சூடாக்கவும். அந்த சூடான பாலில் பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து அவை மூழ்கும் வரை வைக்கவும். இது நன்றாக ஊற வேண்டும்.
இன்னுமொரு அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து நெய் சேர்க்கவும். பின்னர் பாதாம் பருப்பு மற்றும் சில பிஸ்தாக்களை நெய்யில் நிறம் மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
இப்போது அதே கிண்ணத்தில் மூன்று கப் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். பாலை கொதிக்க வைத்து லேசாக கெட்டியாகும் வரை அப்படியே விட வேண்டும்.
பின்னர் ஊற வைத்த உலர் பழங்கள் மற்றும் பால் சேர்க்கவும் மெதுவாக வேக வைக்கவும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி ஏலக்காய் தூள் சேர்க்கவும். இப்போது முன்பே வறுத்து வைத்திருந்த பாதாம், பிஸ்தா பருப்பை மேலே தூவி அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான பேரீச்சம்பழ பாயாசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |