என் புருஷனை சந்தானம் மோசமாக கலாய்த்தார்... நடிகை தேவயானி ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டதிக் கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.
நடிகை தேவயானி
நடிகை தேவயானி - இயக்குனர் ராஜகுமாரன் தம்பதியினர் கடந்த 24 வருடங்களாக தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர்.
2001-ம் இவர்களுடைய திருமண செய்தி வந்தபோது தமிழ்நாட்டிற்கு அது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்போது அஜித், விஜய் என உச்ச நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்த நடிகை தேவயானி இரண்டே படம் இயக்கிய ஒரு இயக்குனரை திருமணம் செய்த விடயம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேவயானியின் தாயாருக்கு இந்த திருமணத்தில் உடன்பாடில்லை, தேவயானி அவசரப்பட்டு விட்டார் என ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசத் ஆரம்பித்தார்கள்.
ஆனால் அத்தனை சர்ச்சைகளையும் முறியடித்து 24 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திருமண வாழ்வில் ரோல் மாடலாக இந்த ஜோடி வலம் வருகின்றனர்.
இந்நிலையில் தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது கணவரை சந்தானம் மிகவும் மோசமாக கலாய்த்தார் என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவயானின் கணவர் ராஜகுமாரன் இயக்குநராக மட்டுமின்றி சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதில் ஒன்று தான் சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட்டான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். அந்த படம் நகைச்சுவை படம் என்பதால் அதில் ஒரு காட்சியில் சந்தானம் ராஜகுமாரனை மிகவும் பயங்கரமாக கலாய்த்து இருப்பார்.
தேவயானி வெளிப்படை
இந்நிலையில் நடிகை தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது கணவரை சந்தானம் கலாய்த்தது பிடிக்கவில்லை என்றும், அது வருத்தம் அளித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் குறிப்பிடுகையில், " சந்தானம் கலாய்த்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு அந்த விஷயமே பிடிக்கவில்லை.
எனது கணவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்று தெரியும்.
ஆனால் இது போன்ற கதாபாத்திரம் என்று எனக்குத் தெரியாது. எனது கணவர் ஏற்று நடித்துள்ளார். ஆனால் எனக்கு பிடிக்கவில்லை.அது எனக்கு வருத்தததை கொடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.

birthday special : 42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |