சிறுநீரக பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமா? இந்த 5 பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க
சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் பழங்களை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
நமது உடம்பில் முக்கியமான உறுப்பு சிறுநீரகமாகும். இவை உடம்பில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து அதனை சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றது.
சிறுநீரகத்தை பாதுகாக்கும் பழங்கள்
தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ள நிலையில், சிறுநீரக பாதிப்புகளின் அபாயத்தை குறைப்பதுடன், சிறுநீரக வீக்கத்தையும் குறைக்கின்றது.
பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல் நிறைந்துள்ள நிலையில், சிறுநீரக செல்களின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியின் அபாயத்தை குறைக்கும்.
சிறுநீரக நச்சுத்தன்மைக்கு சிவப்பு திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், வீக்கத்தை தடுக்கும் ஃபிளாவனாய்டுகளும் உள்ளதால் ரத்தத்தையும், சிறுநீரகத்தையும் சுத்தப்படுத்துகின்றது.
வைட்டமின் சி சத்துக்களை அதிகம் கொண்டு ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது.
சிறுநீரக பாதிப்பு அபாயத்தை குறைப்பதுடன், சிறுநீரகத்தை நச்சு நீக்குவதில் மாதுளை மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகின்றது.