வெயில் காலத்தில் பயிர்கள் இறந்து போகுதா? இந்த ஒரு கரைசல் இருந்தா போதும்
வெயில் காலத்தில் பயிர்களுக்கு ஏற்படும் வறட்சியில் இருந்து பாதுகாத்து பச்சை பசேல் என வளர வைப்பதற்கு சுண்ணாம்பு கரைசல் பெரும் உதவியாக இருக்கும். இதை பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.
செடி மற்றும் கொடிகள் செழிப்பாக வளர
வீட்டில் இருக்கும் செடி மற்றும் கொடிகள் செழிப்பாக வளர யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் வெயில் காலத்தில் இது சாத்தியம் பெறுவது கொஞ்சம் கடினம் தான்.
நாம் நமக்கு மிகவும் பிடித்த செடி ஒன்று வைத்திருந்து அது இறந்து விட்டால் மிகவும் வேதனையாக இருக்கும். அதற்காக தான் இந்த பதிவில் ஒரு கரைசல் ஒன்றை பயிர்களுக்காக தயார் செய்யும் முறையை பார்க்கப்போகிறோம்.
வெயில் காலத்தில் என்னதான் உரம் கொடுத்தாலும் அதில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைந்து விடும். வேகமாக மண்ணின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்டுபோகும்.
இதனால் செடிகளுக்கு தேவையான உயிர் உரம் கிடைப்பதில்லை குறைபாடுகள் ஏற்படும். எனவே செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் வறண்டு போக துவங்கி விடுகிறது.
இதற்கு சுண்ணாம்பு கொஞ்சம் இருந்தால் போதும். இதற்கு விலையுயர்ந்த இரசாயன உரங்கள், முட்டை ஓடு போன்றவை தேவையில்லை. சுண்ணாம்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, செடிகளுக்கு தெளிக்கலாம்.
இதில் உள்ள கால்சியம் செடிகளுக்கு சக்திவாய்ந்த ஆதாரமாக மாறுகிறது. வலுவான தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்து ஆகும்.
இந்த கரைசல் எத்தகைய வெயிலின் தாக்கத்தையும் தாங்கிக் கொண்டு செடிகள் செழிப்புடன் பசுமையாக வளர வைக்கும் என தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |