தயக்கம் இன்றி அம்மா ரோலில் களமிறங்கிய பூர்ணிமா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் பூர்ணிமா அம்மா ரோலில் நடித்த படம் ஓடிடியில் வெளியாகியிருக்கின்றது.
பூர்ணிமா ரவி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் சென்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக விளையாடி வருபவர் தான் பூர்ணிமா ரவி.
இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியவர் என்பதையும் தாண்டி மாடலிங், வெள்ளித்திரை என பல வழிகளில் கலக்கி வருகிறார்.
அந்த வகையில், நயன்தாராவின் நடிப்பில் வெளியான “அன்னபூரணி” படத்தில் நடித்திருந்தார்.
அம்மாவான பிக்பாஸ் பிரபலம்
இதனை தொடர்ந்து “செவப்பி” படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது.
பிக்பாஸ் வீட்டில் வில்லியாக போட்டியாளர்களுடன் நடந்து கொள்ளும் பூர்ணிமா தன்னுடைய தீவிர முயற்சியால் ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஒரு போட்டியாளராக நிறைய எதிர்ப்பை தேடி கொண்டிருந்தாலும் வாய்ப்பை உருவாக்கி சாதிக்கும் பெண்ணாக ஒரு புறம் இருந்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவிற்குள் புதிதாக வரும் எந்த நடிகையும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க விரும்ப மாட்டார்கள்.
இப்படி இருக்கையில் பூர்ணிமாவின் இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக கைக் கொடுக்கும் என சினிமா வட்டாரங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன.
இந்த படத்தினை ராஜா என்பவர் இயக்கியிருக்கிறார். அத்துடன் “செவப்பி ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தை பார்த்த இணையவாசிகள், “கண்டிப்பாக அவருக்கு சினிமாவில் சிறந்த எதிர்காலம் இருக்கும்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |