வாரத்திற்கு 2 தடவை போடுங்க.. முகம் வெள்ளையாகும்
தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் சரும பிரச்சினைகள் அதிகமாகி வருகிறது.
முகப்பருக்கள், கருவளையம், எண்ணெய் வடிதல், கருமையாதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் முக அழகை இல்லாமல் செய்கிறது.
இழந்த முக அழகை பெற நினைப்பவர்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் தற்காலிக பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், அதற்கு பதிலாக வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளலாம்.
காபி தூள் பேக், முட்டை வெள்ளை கரு பேக், கற்றாழை ஜெல் போன்றவை முகத்திற்கு நிரந்தர தீர்வை தரும் என்பதற்காக அடிக்கடி பயன்படுத்தி வந்தால் சரும பிரச்சினைகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
அதற்கு மருத்துவர் ஒருவர் புள்ளிகள் கொடுத்து, இது போன்று வீட்டில் செய்யப்படும் பேக்குகள் எந்தளவிற்கு முக அழகை மீட்டு தருகிறது என்பதை பதிவில் பார்க்கலாம்.
இழந்த அழகை பெற வேண்டுமா?
1. கடலை மா பேக்
கடலை மா பேக் போடுவது எமது முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றி வரும் வைத்தியங்களில் ஒன்று. முன்னோர்கள் விசேஷ நாட்களில் இதனை செய்வதை பழக்கமாக வைத்திருந்தார்கள். முகத்திற்கு உடனடியாக தீர்வு தரும் கடலை மாவுக்கு மருத்துவர் 9/10 புள்ளிகள் கொடுத்திருக்கிறார்.
2. முட்டை வெள்ளைக்கரு பேக்
சிலர் முட்டையின் வெள்ளைக்கருவினால் முக அழகு இரட்டிப்பாகும் என நினைத்துக் கொண்டு அடிக்கடி முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவிக் கொள்வார்கள். இதற்கு மருத்துவர் 7/10 புள்ளிகள் கொடுத்திருக்கிறார். முகத்திற்கு போடலாம், ஆனால் கொஞ்சம் மணம் வருவது போன்று உணரச் செய்யும்.
3. கற்றாழை ஜெல்+ தேங்காய் எண்ணெய்
கற்றாழை ஜெல் என்ன தான் முகத்திற்கு ஆரோக்கியம் மற்றும் பளபளப்பு கொடுத்தாலும் அடிக்கடி பயன்படுத்துவதால் பெரிதாக மாற்றத்தை கொண்டு வராது. அத்துடன் தேங்காய் எண்ணெய் முகத்திற்கு போடும் பொழுது பருக்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு மருத்துவர் 6/10 புள்ளிகள் வழங்கியிருக்கிறார்.
4. கிரீன் டீ +ஐஸ்
கிரீன் டீயை ஐஸ் போட்டு கெட்டியாக்கி, முகத்திற்கு அப்ளை செய்வது தற்போது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனால் பெரியளவு மாற்றம் கிடைக்காது. இதற்கு மருத்துவர் 4/10 புள்ளிகள் கொடுத்திருக்கிறார்.
5. வேப்பிலை தண்ணீர்
முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுவதற்காக வேப்பிலை தண்ணீர் பயன்படுத்துவார்கள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கையே இப்படி செய்ய வைக்கிறது. 7/10 புள்ளிகள் வேப்பிலை தண்ணீருக்கு கொடுக்கப்படுகிறது. வறண்ட சரும பிரச்சினையுள்ளவர்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |