400 வருட சேவைக்கு பின் கடிதப் போக்குவரத்தை நிறுத்திய முதல் நாடு! என்ன காரணம்?
உலகில் மிகவும் பழமையான தொலைத்தொடர்பு முறை ஆக திகழ்ந்து வருவது கடிதப் போக்குவரத்தை 2025 இன் கடைசி மாதத்துடன் டென்மார்க் அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
தொன்று தொட்டு புலக்கத்தில் இருந்து வந்த கடிதப் போக்குவரதானது மக்களுக்கு இடையேயும், நாடுகளுக்கு இடையேயான பிரதான தொலைத்தொடர்பு முறையாக இருந்து வந்துள்ளது.

ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக தொலைபேசி, மொபைல் போன்கள், இணையம் என அடுத்தடுத்து உலகம் பரிணாம வளர்ச்சி அடைந்து சுருங்கிப்போனதன் காரணத்தால் தற்போது கடிதப் போக்குவரத்து முறை மிகவும் அரிதானதாக மாறிவிட்டது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் தாக்குப் பிடிக்க முடியாத அஞ்சலகத்துறை மெல்ல மெல்ல தனது சிறப்பையும் முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
அந்தவகையில் 400 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த கடிதப் போக்குவரத்து முறையை டென்மார்க் அரசு இன்றுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. டென்மார்க்கில் கடந்த 1624 ஆம் ஆண்டு கடிதப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த கடிதப் போக்குவரத்து தற்போது 90 சதவீதம் குறைவடைந்துள்ளதால் அதனை தொடர்வதற்கு அரசாங்கம் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.
எனவே செலவை குறைக்கும் நடவடிக்கையாக கடிதப் போக்குவரத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்துவதாக டென்மார்க் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
மேலும் கடிதப் பிரிவில் பணியாற்றி வந்த 2,200 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதே சமயத்தில் லாபம் அதிகம் உள்ள பார்சல் துறையில் கவனம் செலுத்தப்படும் என்றும் டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது.அதன் பிரகாரம் கடித போக்குவரத்தை நிறுத்திய முதல் நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |