வைட்டமின் சி மாத்திரைகளை அதிகமாக எடுக்காதீங்க! ஆபத்து ஏற்படுமாம்
வைட்டமின் சி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதை விட வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் அதிகமானால் பாதிப்பு ஏற்படுமாம்.
வைட்டமின் சி
அஸ்கார்பிக் அமிலம் என்று அழைக்கப்படும் வைட்டமின் சி சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். பாதிக்கப்பட்ட உடல் திசுக்களை பழுதுபார்ப்பது முதல் சருமத்தை இளமையாக வைத்து முதுமையையும் தடுக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்கும் இது உதவுகின்றது.
ஆனால் வைட்டமின் சி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதை விட, அதன் சப்ளிமெண்ட்டை அதிகமாக எத்துக் கொண்டால் தீங்கு விளைவிக்குமாம்.
photo: netmeds
அதிகமாக எடுத்துக் கொண்டால் என்ன பாதிப்பு?
வைட்டமின் சி மாத்திரிகைளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் சிறுநீரக கல் ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வைட்டமின் சி சத்து மாத்திரைகள் அதிகமானால் செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சரியாக சுரக்காமல், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிறு வலி அதிகரிக்கும்.
image: Shutterstock
இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி, அதிகமானால் உடம்பில் அதிகப்படியாக இரும்பு சத்து சேரவும் வழிவகுக்குமாம். மேலும் கல்லீரல், கணையம், இதயம், தைராய்டு மற்றும் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைக்கவும் செய்கின்றது.
மேலும் வைட்டமின் சி அதிகமானால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பும் ஏற்படலாம்.
குறித்த சத்து அதிகமாகும் போது அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையும் அதிகரிக்கின்றது.
ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி
பெண்களுக்கு தினமும் 75 மில்லி கிராமும், ஆண்களுக்கு தினமும் 90 மில்லி கிராமும் தேவை என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு120 மில்லி கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எனவே அளவோடு எடுத்துக் கொண்டால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இந்த அளவை மீறும் போது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |