துப்பாக்கி முனையில் பெண்ணிடம் செயின் பறித்த முகமூடி நபர்கள் - அதிர்ச்சி வீடியோ!
டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் செயின் படித்த முகமூடி நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்ணிடம் செயின் பறித்த முகமூடி நபர்கள்
டெல்லி, ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தபடி வந்த 2 நபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டனர். இதனால் பதறி போன அப்பெண் அங்கிருந்த கடை ஒன்றில் ஓடிச் சென்று தஞ்சம் அடைய முயற்சி செய்தார்.
அப்போது, அக்கடையில் இருந்த நபர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக அவரை காப்பாற்ற வெளியே ஓடி வந்தார். முகமூடி கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியுடன் இருந்ததைப் பார்த்த அந்த நபர் மிரண்டுப் போய் கடைக்குள் ஓடிச் சென்று ஒளிந்துக் கொண்டார்.
அந்த நேரத்தில் மீண்டும் கடை வாசலில் விழுந்து கிடந்த பெண்ணை நெருங்கி, அவர் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
#WATCH | Two bike-borne men snatched chain from a woman at gunpoint, in Delhi's Rohini area on April 13; police investigation underway: Delhi Police
— ANI (@ANI) April 15, 2023
(Source: CCTV footage) pic.twitter.com/L2xR72NIvR