ஆசை ஆசையாய் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த இளைஞர்....பார்சலை பிரித்த போது காத்திருந்த அதிர்ச்சி
ஆசை ஆசையாய் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த இளைஞருக்கு வெறும் வெங்காயம் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரியில் ஆர்டர் செய்யும் உணவுகள் மாறி வருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ஒருவருக்குப் புதுவிதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் உபைத் என்ற இளைஞரான ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து, டெலிவரி ஆன உணவு பார்சலை பிரித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்.
இவர் ஆர்டர் செய்த ஆனியன் ரிங்ஸ்க்கு பதிலாக, வெறும் வெட்டப்பட்ட வெங்காயம் மட்டுமே இருந்துள்ளது.
இதையடுத்து டெலிவரி செய்த உணவகத்தைக் கண்டிக்கும் விதமா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், டெலிவரியான வெங்காயத் துண்டுகளை விரல்களில் ரிங்காக மாட்டிக் கொண்டு போஸ்கொடுத்துள்ளார். இதையடுத்து இவரின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.