சடலத்திற்கு தீ வைக்க முயன்ற போது கண்விழித்த நபர்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
இந்தியாவில் இறந்ததாக நினைத்து முதியவரின் சடலத்துக்கு தீ வைக்க முயன்ற போது அவர் கண்விழித்து பார்த்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியின் திக்ரி குர்த் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் பரத்வாஜ்(வயது 62), உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதிஷ் இறந்துவிட்டதாக உறவினர்கள் நினைத்துள்ளனர்.
தொடர்ந்து நண்பர்களும், உறவினர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி பின்னர், மயானத்திற்கு கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர்.
அப்போது தகனம் செய்ய முயன்ற போது, முகத்தின் மீதிருந்த துணியை நீக்கி பார்த்த போது சதிஷ் கண்விழித்து பார்த்துள்ளார், பலமாக மூச்சுவிடும் சத்தமும் கேட்டுள்ளது.
இதனால் உறவினர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துவிட, உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர், பின்னர் ராஜா ஹரிச்சந்திர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவமனையின் அலட்சியம் ஏதுமில்லை என முதற்கட்ட போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.