விஷமாக மாறிவரும் காற்று: கைமீறிச் செல்லும் மக்களின் நிலை! முழு ஊரடங்கு ஏற்படுமா?
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பள்ளிகளை மூட உத்தரவு அழிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் முழு லாக்டவுன் போடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
முழு லாக்டவுன் என்றதும் அனைவரின் மனதில் தோன்றும் எண்ணம் கொரோனா மீண்டும் அதிகரித்துவிட்டதா என்று தான். ஆனால் காரணம் இது இல்லையாம். ஆம் மக்கள் சுவாசிக்கும் காற்றே அங்கு விஷமாகி வருவது தான் காரணம்.
காற்று விஷமாகின்றதா?
மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் தேவை என்பதை நம்மில் யாரும் மறுக்கமுடியாது.
டெல்லியில் காற்று மாசுமாடு குறிப்பிட்ட அளவினை விட மிக அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது.
உலகத்தின் AQI (Air Quality Index) என்று கூறப்படும் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால் மக்களின் உயிருக்கு பெரும் சேதத்தினை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
டெல்லியில் காற்று மட்டுமின்றி அங்கிருக்கும் யமுனா நதியும் பல திரவ கழிவுகளால் விஷமாகி வருகின்றதாம்.
உலகில் மிக மோசமான காற்று மாசுபாடான சூழ்நிலையில் டெல்லி தான் முதலிடத்தில் இருந்து வருகின்றது.
மனிதர்கள் சுவாசிப்பதற்கு சரியான AQI அளவு 0 முதல் 50 வரை இருந்தால் சரியாக இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் டெல்லியில் 320, 370 என்ற அளவிற்கு சென்று கொண்டிருக்கின்றது. இது எவ்வளவு பெரிய ஆபத்தான நிலை என்பதை கீழே படத்தினை அவதானித்தால் தெரியும்.

காரணம் என்ன?
டெல்லியில் குளிர்காலங்களில் மிகக் குறைந்த வெப்பநிலை இருக்கும் தருணம் என்பதால், இந்த காலக்கட்டத்தில் மாசுபடுத்துதலை குறைக்க வேண்டும். நாம் மாசுப்படுத்துதலை அதிகப்படுத்தினால் இது மிகப்பெரிய அளவில் காற்று மாசுபடுமாம். வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது மாசுபாடு காற்றோடு காற்றாக மாறிவிடும்.
டெல்லியில் இந்த குளிர் காலகட்டங்களில் தான் விவசாயிகள் ஒரு அறுவடையை முடித்து மறு அறுவடைக்கு பயிருடுவது வழக்கம். டெல்லியினை சுற்றி இருக்கும் ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் ஒரு அறுவடையை முடித்துவிட்டு, மறு அறுவடைக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பு, பயிர்களை மட்டும் எடுத்துவிட்டு மீதம் இருக்கும் செடிகளை எரித்து விடுகிறார்களாம். இந்த காரணம் வெறும் 18 சதவீதம் மட்டும் தான் என்று கூறப்படுகின்றது.
குறித்த விவசாயிகள் டிராக்டர், மற்றும் கூலி ஆட்களை வைத்து வேண்டாத செடிகளை அகற்றுவதற்கு முடியாத நிலையில், அவர்கள் கஷ்டப்படுவதால் ஏக்கர் கணக்கில் இவ்வாறு எரித்துவிடுகின்றனர்.
பின்பு 80 சதவீதம் பாதிப்பு அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் தானாம். டெல்லியைப் பொறுத்த வரை உள்ளூர் போக்குவரத்திற்கு அதிகமான பேருந்து வசதி எதுவும் இல்லாத காரணத்தினால் மக்கள் சொந்த வாகனத்திலேயே சென்று வருகின்றனர். மேலும் அங்கு வாகனங்கள் அதிகரித்து வருவது முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.
மற்றொரு காரணம் யமுனா நதியில் கலக்கப்படும் தொழிற்சாலையின் கழிவுகள். ஆம் நதிக்கரையினை சுற்றி இருக்கும் தொழிற்சாலையின் கழிவுகளை நேரடியாக யமுனா நதியில் கலந்து வருவதாலும் இவ்வாறான பாதிப்பு ஏற்படுகின்றது.
டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அரசு வேலையில் இருப்பவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை முதல் ஒருவார காலத்திற்கு முழுஊரடங்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.