வடமாகாணத்தின் ஓர் சிறந்த சுற்றுலாத்தலமான நெடுந்தீவு... தற்போதைய நிலை!
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று தான் நெடுந்தீவு.
ஒல்லாந்தர் இத்தீவை "Delft" என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே அழைக்கப்படுட்டு வருகின்றது.
நெடுந்தீவு தலைத்தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத் தீவு, தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது.
1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலிலிருந்து புறப்பட்ட 'ஹீர்த் டீ போலோ' (Hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத்தீவின் அழகையும் வளங்களையும் மனதில்கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல, இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்றானாம்.
இத்தனை சிறப்பு மிக்க வரலாற்றை கொண்ட யாழ் நெடுந்தீவின் சிறப்புக்கள் மற்றும் சுவாரஸ்யமான பல தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |