உலகின் இந்த நாடுகளில் வருமான வரி செலுத்த தேவையில்லை! எந்தெந்த நாடுகள் தெரியுமா?
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் வருமான வரி அடுக்கின்படி வருமான வரி விதிக்கப்படுகிறது. அதிகமாக சம்பாதிப்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கங்களுக்கு வருமான வரி வசூல் ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் உள்ள பெரும்பாலானோர் வருமான வரி செலுத்த வேண்டும்.
அதிக வருமானம், அதிக வரி செலுத்த வேண்டும். வரி கட்டும் நாமும் சாலை வரி, அந்த வரி, இந்த வரி கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் வரிகள் கட்ட வேண்டும்.
ஆனால் உலகில் சில நாடுகளில் மக்கள் தங்களின் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது பூஜ்ஜிய வரி விதிக்கப்படுகிறது.
அப்படியானால் வருமான வரியை வசூலிக்காத இந்த நாடுகளின் அரசுகள் எந்த வருமானத்தில் இயங்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.
அப்படி உலகில் வருமானத்திற்கு வரி அரவிடப்படாத நாடுகளைப் பற்றிய முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வருமான வரி விதிக்கப்படாத நாடுகள்
வளைகுடா நாடுகள்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தனிப்பட்ட சம்பளம் அல்லது வருமானத்தின் மீது நேரடி வரியை விதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
எண்ணெய் வருமானமும் சுற்றுலாவிலிருந்து வரும் பெரும் வருமானமும் இங்கு பொருளாதாரத்தை உயர்த்த துணைப்புரிகின்றது.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல துறைசார்ந்த நிபுணர்களும் UAE நாடுகளை வேலை பார்க்கவும் சரியான வருமானத்தை ஈட்டிக்கொள்ளவும் சிறந்த இடமாகக் கருதுவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கின்றது.
சவுதி அரேபியாவில் வருமான வரிக்கான எந்த அமைப்பும் இல்லை. இங்குள்ளவர்கள் தங்கள் வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. இந்த நாடுகளில், வாழும் சாதாரண மக்கள் வரி செலுத்துவது பற்றிய அச்சம் இன்றி இருக்கின்றார்கள்.
பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நாடுகளிலும் வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை. அவற்றின் பொருளாதாரம் எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களில் தங்கியிருகின்றது.அதன் காரணமாக இந்த அரசாங்கங்கள் பொதுமக்களிடமிருந்து நேரடி வரியை வசூலிப்பது கிடையாது.
ஆசியா முதல் ஐரோப்பா வரை, வரி இல்லாத நாடுகள்
வளைகுடா நாடுகளை தவிர்த்து , புருனே, மொனாக்கோ, நவ்ரு மற்றும் பஹாமாஸ் ஆகிய சிறிய ஆனால் பணக்கார நாடுகளும் முற்றிலும் வருமான வரி வசூலிப்பது கிடையாது.
புருனேயில் எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து கிடைக்கும் பெரும் வருமானம் காரணமாக, வரி வசூல் இல்லாமலேயே அரசாங்கம் சிறப்பான பொருளாதார பலத்துடன் இருக்கின்றது.
மறுபுறம், நவ்ரு மற்றும் பஹாமாஸ் போன்ற நாடுகளில், சுற்றுலா அரசாங்கத்திற்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாக உள்ளது, இதன் காரணமாக சாதாரண குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்க வேண்டிய அவசியமில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |