ஜாக்கிங் அல்லது சைக்கிளிங் இரண்டில் எது சிறந்தது? சந்தேகங்களுக்கான விளக்கம்
பொதுவாக தவறான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தினால் சிலருக்கு அதிக எடை பிரச்சினை இருக்கும்.
அதிகமாக இருக்கும் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு டயட்டுடன் சேர்த்து ஜாக்கிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதலையும் பல்வேறு பிட்னஸ் வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இப்படியான சந்தர்ப்பங்களில் சைக்கிளிங் அல்லது ஜாக்கிங் இரண்டில் எது சிறந்தது? என்ற சந்தேகம் பலருக்கும் வரும்.
மாறாக இது போன்ற பயிற்சிகளால் கலோரி குறைத்தல், தசை வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் சைக்கிளிங் அல்லது ஜாக்கிங் இரண்டில் எது சிறந்தது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜாக்கிங்
1. பொதுவாக எடையை குறைக்க வேண்டும் என்று ஜாக்கிங் செய்பவர்களுக்கு முழங்கால், கணுக்கால், இடுப்புகளில் சற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
2. சைக்கிளிங் செய்வதை விட ஜாக்கிங் செய்வதில் அதிக கலோரிகளை குறைக்க முடியும். விரைவாக எடையை குறைக்கவும் முடியும்.
3. ஜாக்கிங் செய்வதால் உடல் முழுமையும் உறுப்புகள் வேலை செய்கிறது. இதனால் உடல் வலிமையடைகின்றது.
4. வேகமாக எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தினசரி செய்து வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
சைக்கிளிங்
1. சைக்கிள் ஓட்டும் போது தரையோடு நேரடி தொடர்பு ஏற்படாது என்பதால் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.
2. சைக்கிள் ஓட்டுவதால் முதுகு, கை தசைகள், தொடை, கால் தசைகள் வலிமை பெறுகின்றன. அத்துடன் வளர்ச்சி பருவத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
3. சைக்கிளிங் செய்யும் முன்னர் உரிய மருத்துவரிடம் உடல் நிலைக்குறித்தான பரிசோதனைகள் செய்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |