வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினை இல்லாமல் இருக்கனுமா?
வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு சில பரிகாரத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் கடன் தொல்லையிலும், அதற்கு வட்டி கட்ட முடியாமலும் சிக்கித் திணறி வருகின்றனர்.
கடன் வாங்குவதற்கு வரவுக்கு மீறிய செலவுகள், ஆடம்பரமான வாழ்க்கை என்று பல காரணங்களை கூறலாம்.
ஜோதிட ரீதியில் ஒருவருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் போது, அர்த்தாஷ்டம சனி நடக்கும் போதும் கடன்வாங்கக்கூடாது.
அதே போன்று கோச்சார ரீதியாக குரு ஆறாம் வீட்டில் நிற்கும்போதும், குரு பகவான் சர்ப்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போதும் கடன் வாங்கவே வாங்காதீர்கள். வாங்கிய கடன் அடையவும், கொடுத்த பணம் திரும்ப வரவும் பரிகாரம் உள்ளது.
கடன் பிரச்சினை இல்லாமல் இருக்க
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் குரு பகவான் செய்யும் போது கடன் வாங்கக்கூடாது.
குரு பகவான் அமர்ந்து இருக்கும் வீட்டை வளர்ப்பதால், கடனும் வளர்ந்துவிடும். ராகு, கேது ஆகிய சர்ப்ப கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வாரங்களுக்கு செய்து வந்தால், நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம், பிறர் உங்களை ஏமாற்றி கடனாக வாங்கிய பணம் அனைத்தும் வந்து சேரும்.
கொடுத்த பணம் திரும்பி வருவதற்கு, கல் உப்பு, வெந்தையம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்சியில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத்துணியில் கட்டி அதனை நம்முடைய வீட்டில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட்டால் பணம் திரும்ப வந்துவிடும்.
கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திருச்சேறை உடையார் கோவிலில், தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் சிவபெருமான். இந்த திருத்தலம் கடன் நிவர்த்தி ஆவதுடன், வறுமையை நீக்கிய செம்மையாக வாழவும் செய்யும்.
முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்தது. மைத்ர முகூர்த்த நாளில் கடனை அடைக்க கடன் விரைவில் தீரும்.
ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும்.
எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனி பகவானின் அருள் தேவை. சனி பகவான் மனது வைத்தால் கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |