மரணம் ஏற்படும் போது நிகழ்வது என்ன? வாழும்போதே சாவை பார்க்கலாம்
மரணம் என்பது எப்படியிருக்கும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் உள்ளது. ஏனென்றால் இறந்தவர்களுக்கு மாத்திரமே அந்த அனுபவம் இருக்கும்.
அவ்வாறு இறந்தவர்களிடம் அதைக் குறித்து கேட்கவும் முடியாது. ஆனால், இறப்பின்போது என்னவெல்லாம் நடக்கும் என்று தெரிந்துகொள்வதற்கும் ஒரு வழி வந்துவிட்டதென்றால் நம்ப முடிகின்றதா?
அவுஸ்திரேலியாவில் ஷான் கிளாட்வெல் என்பவர் பாஸிங் எலக்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார்.
அதன் மூலம் இறப்பு நம்மை நெருங்கும்போது அந்த உணர்வு எவ்வாறு இருக்கும் என்ற அனுபவத்தை பெறமுடிகின்றதாம். இதன் வடிவமைப்பு எப்படி உள்ளதெனில், இதயத் துடிப்பு நிற்பது முதல் மூளை இறப்பு வரையில் அனைத்தும் உள்ளடங்குகிறது.
இதில் என்னென்ன நடக்கும் என்றால், முதலில் இதயத் துடிப்பை சரி பார்க்க தற்காலிக மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் குறிப்பிட்ட நபர் ஹார்ட் மொனிட்டருடன் இணைக்கப்படுவார். இதன்போது உடல் முழுவதிலும் கடந்து செல்லும் மின்சாரப் புயல் அனுபவம், உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் இருக்கின்ற பிரபஞ்சங்களை பற்றிய சிந்தனையைக் கொடுக்கின்றது.
இந்த செயன்முறையில் இருக்கும்பொழுது குறிப்பிட்ட நபருக்கு ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்தால் உடனே வெளியேறலாம்.