சருமத்தில் இறந்த கலங்களை போக்க வேண்டுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க
நாம் நமது சருமத்திற்கு பல அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவோம். இதில் கெமிக்கல்கள் நிரம்பி இருப்பதால் அது நமது சருமத்தை பாதிக்கும். இதற்காக இயற்கையில் காணப்படும் பொருட்களை பயன்படுத்தலாம்.
அதில் பொருள் தான் தக்காளி தக்காளியை நாம் சமையலுக்கு மட்டுமல்ல முகத்தின் அழகிற்கும் பயன்படுத்தலாம். தக்காளி பல தோல் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தோலில் அதிகமாக சேதம் இருந்தால் தக்காளியை பயப்படாமல் பயன்படுத்தலாம்.
இதில் ஏராளமான லைகோபீன் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாக்க வழிவகுக்கும். அந்த வகையில் தக்காளியை எப்படி பயன்படத்தினால் முகத்தின் அழகை இரட்டிப்பாக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தக்காளி
தக்காளியை முகத்திற்கு பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள பிடிவாதமான கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, நிறத்தை சமன் செய்யும். இதை தினமம் பயன்படுத்தலாம்.
சருமத்தில் இறந்த கலங்களை போக்க அரை ஸ்பூன் காபி மற்றும் அரை ஸ்பூன் சர்க்கரையை எடுத்து அதனுடன் தக்காளியை தோல் நீக்கி சேர்க்க வேண்டும். இதை முகத்தில் அப்பிளை செய்யும் போது இறந்த சருமத்தை குறைத்து முகத்தை பளிச்சிட செய்யும்.
அடுத்து அரை தக்காளியில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை வைத்து மெதுவாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமம் உடனடியாக குளிர்ச்சி பெறும். இது உங்கள் சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்க உதவும்.
தக்காளியை மஞ்சளுடன் உங்கள் தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். சில வாரங்களுக்கு இந்த வழக்கத்தை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி முகம் பளிச்சிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |