ABC ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு உண்மையில் கிடைக்கும் பயன் என்ன?
நமது உடல் இயங்குவதற்கு நாம் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். அழகாக தோற்றமளிக்கவும் கட்டுக்கோப்பான உடல் எடை வருவதற்கும் ாம் அதிகமான மரக்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும்.
அந்த வகையில் தற்போது மக்களால் அதிகம் குடித்து வரப்படும் ABC ஜூஸ் இது ஆப்பில் பீட்ரூட், கேரட் போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றது.
இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது ஆச்சர்யமான நன்மைகள் பலன் கிடைக்கும். அவை என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ABC ஜூஸ் பயன்கள்
ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை இது வெளியேற்றுகிறது. பொதுவாக தெரிந்த விடயம் பீட்ரூட் இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்தக்கூடியது. இதில் சேர்க்கப்படும் ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் இது சீரான செரிமானத்துக்கு உதவும்.
கேரட் குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டுக்கும் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஜூஸ் தவறாமல் உடகொள்வது மூலம் மலச்சிக்கலைத் தடுக்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த ஜூஸில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. இதனால் நோய் நொடியின்றி வாழ்வதற்கான நோய் தெிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதற்கு காரணமாக ஆப்பிள் மற்றும் பீட்ரூட்களில் காணப்படும் வைட்டமின் சி, நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடி உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி செய்கின்றன.
இந்த மூன்று கலவையும் சேர்த்து நாம் உடலுக்குள் செலுத்தும் போது ஆண்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின்களை இது அதிகரித்து அவை சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்துகின்றன.
இதிலுள்ள கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் கலையிழந்த சருமத்தை சரி செய்ய உதவுகிறது. சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக செயல்பட்டு இந்த யூஸ் செயற்படுகிறது. அத்துடன் இது சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குகின்றன.
இதில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் முகப்பரு மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவும். பீட்ரூட் ரத்த ஓட்டத்தையும் தசைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தையும் வேகமாக செயல்பட உதவிபுரிகின்றன.
இது தவிர உடல் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள இயற்கைச் சர்க்கரைகளும் உடலுக்கு உடனடி ஆற்றலை இது தருகிறது. இந்த ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
அதேவேளையில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதயநோய் அபாயத்தைக் குறைக்கிறது. கேரட் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இந்த ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இதனால் உடல் எடை குறைப்பவர்களுக்கு உடல் எடையைச்சீராக நிர்வகிப்பதற்கும், இது சரியான தேர்வாக அமையும். நாம் என்னேரமும் பசிக்கு ஏதாவது உணவு உண்ணும் போது அதை தவிர்த்து இந்த ABC ஜூஸ் குடிக்கும் போது நாம் ஏகப்பட்ட நன்மைகளை குறுகிய காலத்திற்குள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |