திடீரென கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள் - அதிர்ச்சியில் மக்கள்!
அமெரிக்காவில் திடீரென கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாண கடற்கரையோரத்தில் லட்சக்கணக்கான மீன்கள் திடீரென்று இறந்து கரை ஒதுங்கியது. இந்த மீன்கள் அனைத்தும் குயின்டானா பீச்சிலிருந்து சுமார் 9.7 கிமீ தொலைவில் உள்ள பிரையன் பீச் வரைக்கும் மீன்கள் இறந்து கிடந்தன.
கால நிலை மாற்றத்தாலும், சூரியன் வெப்பமயமாகுவதால், ஆக்சிஜன் அளவு குறைவால் இப்படி மீன்கள் இறந்து போயுள்ளதாக செய்தி நிறுவனங்களில் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Thousands of dead fish wash ashore on Gulf Coast in Texas.#ProtectThePlanet#RespectThePlanet ??? pic.twitter.com/7V1Fxx1syd
— Pharaoh R. El-Aton (@PharaohSaidThat) June 12, 2023