பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறிய தொகுப்பாளினி டிடி! வைரலாகும் புகைப்படங்கள்
தொகுப்பாளி டிடி அழகிய சேலையில், பக்கா கிராமத்து பெண் போல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

அவரை ரசிகர்கள் டிடி என அழைப்பது வழக்கம். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
இவருக்கு பெரிய அளயாளத்தை கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான். சின்னத்திரையில் மாத்திரமன்றி சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும் தனியாகவே வாழ்வில் சாதித்துக்காட்டவும் முடியும் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதை நிரூபித்து வருகின்றார்.
இந்நிலையில், 40 வயதை கடந்தும் குறையாத அழகுடன் அசத்தி வரும் டிடி பக்கா கிராமத்து லுக்கில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |