சுதந்திர பறவையாக சுற்றிதிரியும் தொகுப்பாளினி டிடி... துபாயில் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
தொகுப்பாளினி டிடி துபாய்க்கு சுற்றுலா சென்று தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
1999ம் ஆண்டு பள்ளி படிக்கும்போதே விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான அவர், முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனேயே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.
இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான். இது அவரின் அடையாளமாவே மாறியது.
சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் குவிந்தனர். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
ஆனால் தற்காக இரண்டு பேரும் விவாகரத்து செய்தார்கள் என்பது தெரியவில்லை. விவாகரத்துக்கு பின்னர் டிடி சிங்கிளாகவே இருந்துவருகிறான்.
இந்நிலையில் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்று பல இடங்களிலும் சுற்றித்திருந்து டிடி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |