பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள்
பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), 40 வயதைக் கடந்த நிலையிலும் தனது அழகாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறன்றமை அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், தற்போது பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அவரை அன்புடன் “டிடி” என்று அழைத்து வருவது வழக்கம். பின்னர் அந்த பெயரே அவரது அடையாளமாகவே மாறியது என்று சொன்னால் மிகையாகாது.

சின்னத்திரையில் உச்சத்தைத் தொட்ட டிடி, விசில், பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் சில படங்களுக்கு பின்னணி குரலும் வழங்கியுள்ளார். தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தபோதிலும், தனிமையிலும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது கலகலப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான கேள்விகளின் மூலம் பிரபலங்களிடமிருந்து சுவாரஸ்யமான பதில்களை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் திறமை கொண்டவர் டிடி.
எனினும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாக காண முடியவில்லை.

இந்நிலையில், டிடி சமீபத்தில் பச்சை நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |