தொகுப்பாளினி டிடியின் அக்காவா இது? நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்
பிரபல தொகுப்பாளினி டிடியின் அக்கா பிரியதர்ஷினி கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியதர்ஷினி
பிரபல ரிவி தொகுப்பாளியான டிடி என்கிற திவ்யதர்ஷினியை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது. அந்த அளவிற்கு தனது பேச்சுத்திறமையினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
டிடியின் அக்கா தான் பிரியதர்ஷினியும் தொகுப்பாளினியாக வலம்வந்து பின்பு நடிகையாகவும் நடித்து வந்தார். பின்பு சீரியலில் களமிறங்கி நடித்த இவர், நடனத்தின் மீது இருந்த ஆர்பத்தினால் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசையும் பெற்றார்.
பின்பு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.
கணவருடன் நீச்சல் உடையில் பிரியதர்ஷினி
ஓய்வு நேரங்களில் கணவருடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் இவர் தற்போதும், கணவருடன் சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் உடையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ள நிலையில், தங்கை டிடி-யைப் போலவே மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
காதல் கணவர் ரமணாவுடன் வெளியான நீச்சல் உடை புகைப்படம் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகின்றது.