எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே திருமணத்துக்கு பின்னர் ஆண்களின் வாழ்விலும் சரி பெண்களின் வாழ்விலும் சரி மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான்.
ஆண்களை பொருத்தவரை தங்களின் குடும்பத்துடன் மனைவியும் இணையும் ஒரு சாதாரண மாற்றத்துக்கு தான் முகம்கொடுக்க நேரிடும்.
ஆனால் பெண்கள் திருமணத்துக்கு பின்னர் வாழும் சூழலில் ஆரம்பித்து உணவுமுறை, பழக்கவழக்கம் என அனைத்திலும் பாரிய மாற்றங்களை சந்திக்கின்றனர். இந்நிலையில் குறிபிட்ட சில பெண்களுக்கு தாய் போல் தோழமையுடன் பழகக்கூடிய மாமியார் அமைந்துவிடுவார்கள்.
மாமியார் என்னதான் நட்பாக இருந்தாலும் சில விடயங்களை மாமியாரிடம் பகிர்வது எதிர்கால வாழ்க்கையை பாதிக்க கூடியதாக இருக்கும். அந்தவகையில் ஒருபோதும் மாமியாரிடம் சொல்லவே கூடாத விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
கணவரை பற்றி குறை சொல்ல கூடாது
மாமியார் எவ்வளவு விளையாட்டாக பேச கூடியவராக இருந்தாலும் கூட கணவரை வளர்த்த விதம் பற்றியோ அல்லது கணவரின் நடத்தை பற்றியோ ஒரு போதும் மாமியாரிடம் விளையாட்டாக கூட குறை கூற கூடாது. நீங்கள் நகைச்சுவையாக கூறியிருந்தால் கூட அது உங்கள் எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
முடியாது என சொல்லது
மாமியார் ஏதேனும் வேலை சொல்லும் போது விளையாட்டாக கூட என்னால் செய்ய முடியாது என்ற வார்த்தையை சொல்ல வேண்டாம். விளையாட்டாக நீங்கள் சொல்லியிருந்தாலும் அதனை மாமியார் மரியாதை குறைவாக எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இது எதிர்காலத்தில் மாமியார் மருமகள் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக அமைகின்றது.
திரும்ப கேள்வி கேட்க வேண்டாம்
உங்கள் மாமியார் பேசும் போது எதிர்த்து பேசுவதை முற்றாக தவிர்க்க வேண்டும். அவர்கள் உங்களுடன் எவ்வளவு தோழமையுடன் பழகினாலும் எதிர்த்து பேசும் போது அந்த உறவு நீடிக்க வாய்ப்பு மிகவும் அருகிவிடுகின்றது. இந்த தவறை மறந்தும் செய்துவிட கூடாது.
செல்லம் கொடுத்து கெடுக்க வேண்டாம்
உங்கள் கணவன் தவறு செய்யும் பட்சத்தில் விளையாட்டாக கூட மாமியாரிடம் நீங்கள் இப்படி செல்லம் கொடுத்து வளர்த்தது தான் காரணம் என்று சொல்லிவிட கூடாது. இது அப்போதே தாக்கம் செலுத்தாத போதும் பிற்காலத்தில் குடும்பத்தில் விரிசல் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.
உங்கள் பெற்றோருடன் ஒப்பிட வேண்டாம்
உங்கள் மாமியாரை ஒருபோதும் உங்கள் அம்மாவுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிடுங்கள். உலகில் பெரும்பாலானவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை விடும்பவது கிடையாது. எனவே விளையாட்டாக கூட இப்படி பேசாதீர்கள். இது குடும்பத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |