கொலஸ்ட்ரால் அளவை நொடியில் கரைக்கும் பேரிச்சை! ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்?
கொலஸ்ட்ராலை குறைக்க பலரும் பலவித வழிகளை பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் மாற்றத்தை கொண்டு வருகின்றனர்.
இந்த உணவு வகைகளில் பேரீச்சம்பழம் மிக முக்கிய பங்கை வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பேரிச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

மேலும் இதில் கனிமங்கள், சர்க்கரை, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது.
பேரிச்சம்பழமானது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் நாள் முழுவதும் உடலில் ஆற்றல் சுழற்சியை ஊக்குவிக்கின்றன.
பேரிச்சம்பழம் என்பது அனைத்து தாவரப் பொருட்களைப் போலவே கொலஸ்ட்ரால் இல்லாத ஒரு வகை பழமாகும்.

பேரிச்சம்பழம் கெட்ட கொழுப்பைக் குறைக்குமா?
எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ராலை பேரிச்சம்பழத்தின் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இவை இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கின்றன.
எனவே உங்கள் தினசரி உணவில் பேரீச்சம் பழங்களை சிறிய அளவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும்.

சிறந்த உணவு பொருளான பேரிச்சம் பழத்தில் கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் மிகக் குறைந்த கொழுப்பு அளவே இதில் உள்ளது.
பக்கவாதம், இதய உறுப்புகளின் பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுக்கவும் பேரிச்சம்பழம் உதவும்.
பேரிச்சம்பழத்தில் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை உடலுக்கு ஊட்டமளிக்க கூடியவை.
மேலும் இதில் உள்ள ஜிங்க் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது, அதே நேரத்தில் மெக்னீசியம் இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.

எவ்வளவு சாப்பிடலாம்?
பேரிச்சம்பழத்தில் கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. எனவே, உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உங்கள் உணவில் பேரீச்சம்பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டாலே போதும்.
மேலும் இதில் சிறிது அளவு சர்க்கரை உள்ளதால், அவற்றை அதிகமாகக் சாப்பிட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.