பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனை ஏற்படுமா? பலரும் அறியாத உண்மை
அதிகமான சத்துக்களைக் கொண்ட பேரீச்சம்பழத்தினால் சில ஆபத்துக்களும் ஏற்படுகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.
பேரீச்சம்பழம்
பேரீச்சை பழம், பனை மரத்தில் விளையும் ஒரு இனிப்பான பழமாகும். இது மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது.
பேரீச்சை பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன. இவை உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.
தினமும் 2-3 பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவது உடம்பிற்கு நன்மையை அளிக்கின்றது. ஆனால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
பாதிப்புகள் என்ன?
பேரீச்சம்பழம் ஒன்றினை நாம் சாப்பிட்டால் 20-30 கலோரிகள் கிடைக்கின்றது. கலோரிகள் நிறைந்த பேரீச்சம்பழத்தினை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
அதிக நார்ச்சத்தானது வயிறு வீக்கம், வாயு தொல்லையை ஏற்படுததுவதுடன், செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்துகின்றது.
இரத்த சர்க்கரை அதிகரிக்கும்: மிதமான கிளைசெமிக் குறியீடு (சுமார் 55) கொண்டதால், நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும் அல்லது அளவோடு உண்ண வேண்டும்.
ஆரோக்கிய நன்மைகளுக்கு, பேரீச்சம்பழத்தை மிதமான அளவில் உட்கொள்வது அவசியம். ஆனால் பேரீச்சம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாகப் பெற, அதை மிதமான அளவில் உட்கொள்வது மிகவும் முக்கியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
