இரவில் மொபைல் பார்த்த பின் தான் தூங்குவீங்க? அப்ப இந்த நோய் ஆபத்து இருக்கும்..
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தூக்கம் என்பது இன்றியமையாதது.
தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். அநேகமானவர்கள் தொலைபேசியை பார்த்து விட்டு தான் தூங்குவார்கள்.
இவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் போனில் இருந்து வரும் வெளிச்சத்தினால் மூளையில் உள்ள மெலாட்டோன் எனப்படும் ஹார்மோன் பாதிக்கப்படுகின்றது. இதனால் சிலருக்கு தொடர் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.
அதுமட்டுமன்றி இதயம் சார்ந்த நோய்கள், நெஞ்செரிச்சல் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றன.
மேலும் இரவில் அதிகமான நேரம் தூங்காமல் இருந்து விட்டு காலையில் அதிக நேரம் தூங்குவார்கள். இது நிறைவான தூக்கமாக உடல் ஏற்றுக் கொள்ளாது.
இது போன்று தூக்கம் தொடர்பாக கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் குறித்து பார்க்கலாம்.
தூக்கம்
1. சிலர் இரவில் அதிகமாக தொலைபேசியை பயன்படுத்துவார்கள். காலையில் அந்த நேரத்தை பூர்த்தி செய்வதற்காக தூங்குவார்கள். இது சில நேரங்களில் புற்றுநோய்களை ஏற்படுத்தலாம்.
2. மன அழுத்தம், தலைமுடி உதிர்வு, கண்களை சுற்றி கருவளையம் ஆகிய பிரச்சினைகள் எழும்.
Image - GETTY IMAGES/ISTOCKPHOTO
3. தொலைபேசியிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் இருக்கும் வெள்ளை படலத்தை பாதிக்கும்.
4. தொலைபேசியை பயன்படுத்தி சரியாக 10 நிமிடங்களுக்கு பின் தூங்க செல்வது ஆரோக்கியமானது.
5. படுத்திருக்கும் இடத்திலிருந்து 10 மீட்டர் இடைவெளிவிட்டு மொபைல் போனை பயன்படுத்துவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |