நகத்தை அழகுப்படுத்த நெயில் பாலிஷ் பயன்படுத்துபவரா நீங்கள்... அதில் மறைந்திருக்கும் ஆபத்து பற்றி தெரியுமா?
ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் அழகை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் அதிக நேரமும் செலவும், அக்கறையும் கொண்டிருப்பார்கள். அதில் அவர்கள் அதிக கவனம் எடுத்து பார்த்துக் கொள்வது நகத்தை அழகுப்படுத்திக் கொள்வது தான்.
அழகிற்காக நீளமாக நகம் வளர்த்து அதற்கு ஏற்ற நிறத்தில் நெயில் பாலிஷ்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அழகே ஆபத்தாக மாறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வாறு பயன்படுத்தும் நெயில் பாலிஷில் இருக்கும் ஆபத்து என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்
நெயில் பாலிஷின் பக்கவிளைவுகள்
நெயில் பாலிஷ் போடும் போது அதில் இருக்கும் ஆபத்தான ரசாயனம் கண்கள் மற்றும் வாய் வழியாக உடலுக்குள் சென்று, உள்ளிருந்தே நமக்கு மிகவும் நோயுறச் செய்யும் வண்ணமயமான அழகு சாதன பொருளாகும்.
நெயில் பாலிஷ்களில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது பொருட்களை ஒட்டிக்கொள்ள பயன்படுகிறது. இந்தப் பொருள் நம் உடலில் படும் வேளையில் தோல் நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும்.
நெயில் பாலிஷில் இருக்கும் ஆபத்தான இரசாயனம் உங்கள் உடலுடன் தொடர்பு பட்ட பிறகு உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நெயில் பாலிஷில் இருக்கும் ரசாயனங்கள் உங்கள் வயிற்றின் செரிமான மற்றும் ஹார்மோன் அமைப்புகளில் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
நெயில் பாலிஷ் பயன்படுத்தும் பெண்களிடம் டிரிபெனைல் பாஸ்பேட் என்ற நச்சுப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களை நோயுறச் செய்ய இதுவே போதுமானது நெயில் பாலிஷில் உள்ள டோலுயீன் ரசாயனம் மிக அதிக அளவில் உங்கள் உடலை சென்றடைந்தால், பெண்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.
நெயில் பாலிஷில் டோலுயீன் எனப்படும் ஒரு உறுப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும், இது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடமிருந்து சிறு குழந்தைகளுக்கு நேரடியாக அனுப்பப்படும். இது எதிர்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |