இதை படித்தால் ஒரு நிமிடம் சுடுதண்ணீரில் குளிக்க யோசிப்பீங்க!
மழைக்காலம் ஆனாலும் சரி, வெயில் காலம் ஆனாலும் சரி சுடு நீரில் தான் குளிப்போம் என்று சொல்வர்கள் ஏராளம்.
இதனால் உடலுக்கு நன்மை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் இதனால் பல தீமைகள் உண்டு என்று உங்களுக்கு தெரியுமா?
குளியல் என்றாலே நம் உடலின் அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, நம் உடலின் வெப்பத்தை தணிப்பது.
அன்றைய காலத்தில் குளத்தில், கிணற்று நீரில் குளித்து வந்தார்கள் நம் முன்னோர்கள், முதலில் காலிலிருந்து பின்னர் தலை வரை நீரில் நனைப்பதே சிறந்த குளியலாக பார்க்கப்படுகிறது.
இந்த பதிவில் சுடு நீரில் தொடர்ந்து குளித்து வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மிக முக்கியமாக சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து சுடு நீரில் குளித்து வந்தால் குழந்தை பேறு தொடர்பான பிரச்சனைகள் எழலாம் என கூறப்படுகிறது.
குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சனையை சந்திப்பவர்கள், குளிர்ந்த நீரில் குளியல் போட தயாராகுங்கள்.
குளிர்காலத்தில் சுடு நீரில் குளித்தால் மட்டுமே நல்லது என்று நினைக்கிறோம், ஆனால் அது முற்றிலும் தவறானது.
ஏற்கனவே பனியால் வறண்டு போன நமது தோலை சுடு நீர் மேலும் வறட்சியாக்கும் என்பதே உண்மை.
ஏனெனில் சுடு நீர் நமது தோலின் ஈரப்பதத்தை எடுத்து விடுகிறது, இதனால் பல தோல் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பவர்களை விட சுடு நீரில் குளிப்பவர்களின் தோல் மிக விரைவாகவே தளர்ந்து விடுவதால், வயதான தோற்றத்தை அளிக்கும்.
மிக முக்கியமாக முடி அதிகம் கொட்டும், ஏற்கனவே முடி கொட்டுதல் அதிகம் இருந்தால் சுடு நீரில் குளிக்காமல் இருப்பதே நல்லது.