நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சிறுநீரகத்தை ரொம்ப பாதிக்குமாம்! இனிமே செய்யாதீங்க
நமது உடலில் சிறுநீரகங்கத்தின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாகும். இது உங்கள் இரத்தத்தை சுத்திரிக்கிறது, கழிவுகளை நீக்குகிறது, எலக்ட்ரோலைட்டுகளின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
உங்கள் உடலின் இரத்தம் ஒரு நாளைக்கு 40 முறை உங்கள் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. அதனால் தான் உங்கள் சிறுநீரகங்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிக முக்கியம்.
அதிகப்படியான வலி நிவாரணிகள்: வலி நிவாரணிகள் அதாவது ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) வலியைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் அது உங்கள் சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும். அதனால் நீங்கள் வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கூடுதல் உப்பை எடுத்துக்கொள்வது: உப்பு அல்லது சோடியம் அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்த அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கும். அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும் மற்ற மசாலாப் பொருட்களை சேர்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. உங்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
போதுமான தண்ணீர் குடிக்காதது: தண்ணீர் அதிகம் குடிப்பது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. சிறுநீரக நோய்களிலிருந்து தப்பிக்க 3-4 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.