Dance Jodi Dance: அலப்பறை செய்த மணிமேகலை- பாதி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாபா பாஸ்கர்
புதிய தொகுப்பாளினியாக அறிமுகமாகும் மணிமேகலை செய்த அலப்பறையில் பாபா பாஸ்கர் பாதி நிகழ்ச்சியோடு வெளியேறியுள்ளார்.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
கடுப்பான பாபா பாஸ்கர்
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக அறிமுகமான மணிமேகலை பயங்கரமாக அலப்பறை செய்துள்ளார்.
பாபா பாஸ்கர் மணிமேகலை செய்த அலப்பறையில் பாதியில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது போன்ற காட்சிகளும் ப்ரோமோக்களில் காட்டப்பட்டுள்ளன.
அதே சமயம், நடுவர்களில் ஒருவரான நடிகை சினேகாவிடம், “நீங்கள் ஒரு பிரபலத்திடம் பேசுகிறீர்கள் என தயக்கம் கொள்ள வேண்டாம்..” எனக் கூற செட்டில் இருந்த மற்ற நடுவர்கள் உட்பட பலரும் சிரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் பாபா பாஸ்கர், “ இந்த மேடை பல டான்ஸருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது உனக்கு தெரியுமா?” என கேட்க, அதற்கு மணிமேகலை,“நான் ஒரு டான்ஸருக்கே கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்திருக்கிறேன் அது உங்களுக்கு தெரியுமா?” என பதில் கேள்வி எழுப்பி, நிகழ்ச்சியை அமர்களப்படுத்தியுள்ளார்.
இப்படியாக ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
